நெட்டிசன்:

சுரேஷ் தினா முகநூல் பதிவு

டலூர் புண்ணியபூமியில் துவங்கியது ஜோதிதரிசனம்.!!! கடலூர் மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றான வடலூர் சத்திய ஞானசபையில் 149வது தைப்பூசத் திருவிழா இன்று நடைபெறுகிறது.!!

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடி நின்றேனே” என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில்… இன்று “149வது தைப்பூச ஜோதி” தரிசன விழா நடைபெறுகிறது.!!

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா.! தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.!

தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று நடைபெறுகிறது. இன்று(08/02/2020) காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு முதல் ஜோதி தரிசனம் நடைப்பெற்றது…..

தொடர்ந்து காலை10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள்(09/02/2020) காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.

ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அ

தனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் காணலாம்.!!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி.! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.!!