நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்…!

நடிகர் வடிவேலு பாலாஜி கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது.

முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 45. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.