vadivelu and pragathi
வைகை புயல் வடிவேலுவை யாராலும் மறக்க முடியாது அந்த அளவுக்கு இவரின் காமெடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது அப்படிபட்ட வடிவேலு திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனது அவரின் ரசிகர்களால் தாங்கி கொள்ள முடியாமல் போனதால் இவரின் பிரபலமான வசனங்களை எல்லாம் அவரின் ரசிகர்கள் டப்ஸ்மேஷ் செய்து இணையத்தில் வெளியிட்டு அவர் இல்லாத குறையை போக்கி கொண்டிருந்தனர்.
அப்படி வடிவேலுவின் ஒரு டயலாக்கை (லேடண்ட்ட பேசறியா ? பின் லேடண் ) டப் ஸ்மேஷ் செய்து உலகம் முழுக்க பிரபலம் அடைந்தவர் இந்த குட்டி பெண் பிரகதி இவர் செய்த அனைத்து வீடியோக்களுமே வடிவேலுவை பற்றி தான் அந்த அளவுக்கு ஒரு தீவிரமான ரசிகையாம் இவர்.
இவரின் இந்த ஆசையை கண்ட நடிகர் விஷால் இவருக்கு ரசிகராகவே மாறிவிட்டாராம். அதனால் நேற்று கத்தி சண்டை படத்தின் ஆடியோ விழாவுக்கு இவரை அழைத்து வடிவேலுவுடன் புகைப்படம் எடுக்க வழி செய்துள்ளார்.
பிரகதி சென்னையில் 11ஆம் வகுப்பு படிப்பவர் அப்பா இன்ஜினியர். அம்மா டாக்டர். அண்ணன் மருத்துவம் படிக்கிறார். இவர் மருத்துவம் படித்துவிட்டு லண்டனில் செட்டில் ஆக போகிறாராம்.
ஆஹான்…