உலக அளவில் டிரெண்டிங்கான வடிவேலுவின் ‘நேசமணி’….

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் வடிவேலு விஜய் உடன் நடித்த ஒரு படத்தின் கதாபாத்திரமான நேசமணி கதாபாத்திரம் இன்று உலக அளவில் டிரெண்டிங்காகி உள்ளது.

டிவிட்டர் சமூக வலைதளத்தில் தினசரி ஏதாவது ஒரு நிகழ்வு டிரெண்டிங்காகி வருவது வழக்கம். சமீப்ததில் பிரதமருக்கு எதிராக தமிழகத்தில் பகிரப்பட்ட கோபேக் மோடி உள்பட பல டிரென்டிங்குகள் பிரபலமான நிலையில், தற்போது வடிவேலு காமெடி பாத்திரமான நேசமணி என்ற பெயர் டிரெண்டிங்காகி உள்ளது.

நடிகர் விஜய், சூர்யா நடித்து வெற்றிப்படமாக வெளியான த ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் பெயர் நேசமணி.  அந்தப் படத்தில் பெயிண்ட்டிங் காண்ட்ராக்டராக வரும் வடிவேலு, ஜமீன் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கச் சென்று பல லூட்டிகளை அடித்திருப்பார். இதைக்கொண்டு தற்போது ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

நேற்று சென்னை அளவில் டிரெண்டிங்கான   #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் இன்று  உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ள அளவுக்கு நெட்டிசன்கள் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்

சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என ஒரு நெட்டிசன் பதிலளித்துள்ளார்.

மேலும் ஏராளமானோர் வடிவேலுவின் நேசமணியை டிரெண்டிங்காக்கி பதிவிட்டுள்ளனர். அவர்களின் பதிவுகள் கீழே … வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி