ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது… மரண கலாய் கலாய்த்த வடிவேலு….. வீடியோ

ரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2 ஆண்டுகளாக பூச்சாண்டி காட்டி வந்த ரஜினி, அரசியலுக்கு வந்தால் பணம் செலவாகும், யாராவது பணம் செலவழித்து ஆட்சி அமைத்தால், தான் சொகுசாக வந்து பதவியில் வந்து உட்கார்ந்து கொள்வதுபோல நேற்றைய செய்தியாளர்களுடனான உரையில் தெரிவித்திருந்தார்….

இதன் காரணமாக அவர் அரசியலுக்கும் வரமாட்டார், பணமும் செலவழிக்க மாட்டார் என்பது உறுதிப்படுத்தப் பட்டு விட்டது. தனது படத்தை வெற்றிப்படமாக்கும் முயற்சி காரணமாகத்தான், அவ்வப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து உசுப்பேத்தி வந்ததும் நேற்றைய அவரது உரையின் மூலம் அம்பலமாகி உள்ளது.

ரஜினியின் கோழைத்தமான இந்த அறிவிப்பை அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரஜினி கூறிய மூன்று திட்டங்கள்… சாத்தியமா?

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான, வடிவேலு, தன் பங்குக்கு ரஜினியை மேலும் கலாய்த்துள்ளார்… நேற்று திருச்செந்தூர் முருகனை தரிசிக்க, அங்கு வந்த வடிவேலுவிடம் செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினர்…

அதற்கு பதில் தெரிவித்த வடிவேலு, ரஜினி அரசியலுக்கு வருவரரை என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது…. அவருக்கும் தெரியாது…. அவர் வர்றப்ப பார்த்துக்குவமே…. அவரது பாணியில் நக்கலாக கலாய்த்துள்ளார்… 

‘மாப்ள நான் இல்ல..ஆனா சட்டை என்னோடது…’ மக்களை மீண்டும் குழப்பிய ரஜினி

வடிவேலுவின் வீடியோ வைரலாகி வருகிறது…