இயற்கையை மதிக்கின்றோம் , இத்தோடு விட்டுவிடு என பாடும் வடிவேலு…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்காக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இது தொடர்பாக வடிவேலுவும் பாடல் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பாடியிருக்கும் வரிகள்:

காடுகளை அழித்தோம்

மண் வளம் கெடுத்தோம்

நீர்வளம் ஒழித்தோம்

நம் வாழ்க்கை தொலைத்தோம்

வைரஸாய் வந்தே நீ

பாடம் புகட்டி விட்டாய்

இயற்கையை மதிக்கின்றோம்

இத்தோடு விட்டுவிடு

என வடிவேலு பாடியுள்ளார்.