மீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘உங்கள் நான்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் சிவாஜி, கமல் உடன் இணைந்து நடித்தது குறித்த சுவாஸ்யமான தகவல்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக படித்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, ஒதுங்கியிருக்கும் நடிகர் வடிவேலு, கமல் பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். அவர் அரங்கத்திற்குள் நுழையும்போதே பலத்த கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டார். ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு,   “60 வருஷமா கமல்  எவ்வளவு விஷயங்களை பார்த்து இருப்பார். அவருக்கு எத்தனை ஏவுகணைகள் பறந்திருக்கும், எத்தனை பாம் வச்சிருப்பாங்க. அதையெல்லாம் தாண்டி பாயும் இடத்தில் பாய்வதும் மறைய வேண்டிய இடத்தில் மறைவதும், இப்படி பல வித்தைகளை காண்பித்து இன்று இந்த இடத்தில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் ஒரு பல்கலைக்கழகம் என்று புகழாரம் சூட்டினார்.

தனக்கு, அவரது தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த கமல்ஹாசன், நாளை காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்படி சொல்லி இருந்தார். நான் முந்தைய நாள் இரவே அங்கு போய் விட்டேன். இதைக் கேள்விப்பட்ட கமல்,   “நாளை காலை விடிந்தவுடன் தானே… உங்களை வரச் சொன்னேன்… ஏன் முன்பே வந்தீர்கள்” என்று கேட்டார். அதற்கு நான் “நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்த உடனேயே எனக்கு விடிந்து விட்டதுனு சொன்னேன்” என்றவர், திரையுலகுக்கு வந்து, 4வது  படத்திலேயே கமல், சிவாஜி என மிகப்பெரிய ஜாம்பவான்கள் உடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு உங்களால் கிடைத்தது. அப்போது எனக்கும் விடிந்தும் விட்டது எனவும் வடிவேலு கமல்குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“தேவர் மகன் படத்தில் சிவாஜி இறந்ததும். எல்லோரும் அழக் கூடிய காட்சி இடம் பெற்றிருக்கும். அப்போது என்னை அழுகச் சொன்னார்கள். இப்போது எப்படி அழுகிறேன். பாருங்கள் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டே,  கமலை விட நான் அதிகமாக அழுது கொண்டிருந்தேன்… அப்போது பிணமாக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் திடீரென எழுந்து… யார்ரா… இவன்.. எனக்கென்ன 2 மகனா நீ ஏன்டா இப்படி அழுகுற…? போய் தள்ளி உக்காருங்க என்று என் வாயில் துண்டை சுற்றி கொண்டு அமர சொன்னார்….

அதற்கு பிறகு என்னை தனியாக அழைத்து இவன் நன்றாக மதுரை தமிழ் பேசுகிறான் என்றும் பாராட்டி எனக்கு முத்தம் அளித்தார்.. அதற்குப் பிறகுதான் நடிப்பு என்றால் என்ன என்று நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்’ என சிவாஜி குறித்தும் வடிவேலு பெருமிதமாக பேசினார்.

கமல்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலுக்கு, கமல் நடிக்கும் தேவர்மகன்-2 படத்திலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்…

வடிவேலு பேசும் வீடியோ…