நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு அவர் ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை அனைவரும் அவரை வாழ்த்து மழையில் நினைத்தனர் .

வாழ்த்துரைத்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள்” என்றும் ”விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/VadiveluOffl/status/1305009776951136257?s=19

திரைப்படங்களில் நடிப்பது குறித்து கருத்து கூறுகையில், சீக்கிரமே மிகப் பெரிய என்ட்ரீயோடு வருவதாகக் கூறிய அவர், வாழ்க்கையென்றால் எங்கே இருந்தாலும் சைத்தான் சனியன் எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லோர் வாழ்க்கையிலும் அவை உண்டு. என் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் இருக்குமா என அவருக்கே உரிய நகைச்சுவை ததும்ப கூறினார்.