தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதால் நெட்பிளிக்சில் களமிறங்கும் நேசமணி…!

 

 

23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் படப்பிடிப்பு நின்றுவிட்டது. 23ம் புலிகேசி படத்தின் பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை போனது. வடிவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதால் படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஆனால் நடிகர் வடிவேலு நிபந்தனை எதுவுமின்றி, படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது சம்பளம் மற்றும் இதுவரை ஆன என ரூ.9 கோடியை படக்குழுவுக்கு வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவை ஏற்றக்கொள்ளாததால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியது.இந்நிலையில் உலகலாவிய சினிமா இணையதளமாக உள்ள நெட்பிளிக்சில் நடிக்க உள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: nesaani, netflix, red card, shankar, Vadivelu
-=-