ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி குழுமத்தில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு….!

ரஜினிகாந்தின் ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஐசரி கணேஷின் நிறுவனமான வேல்ஸ் கல்வி குழுமம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் தயாரித்து வருகிறார் ஐசரி கணேஷ். இதில் ஒன்று தான் சமீபத்தில் வெளியான ‘எல்.கே.ஜி’.

கடந்த 3 நாட்களாக ஐசரி கணேஷுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன.

சென்னையில் உள்ள ஐசரி கணேஷ் இல்லம், பல்கலைக்கழகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 3 இடங்கள் உட்பட மொத்தம் 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.300 கோடி வருவாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி