வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ உருவாகிறது….!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது .இதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை வெளியிட்டார் கெளதம் மேனன்.

இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டர் ஆண்டனி என இருவரும் பணிபுரிந்துள்ளனர். இந்த குறும்படத்தை கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மாநாடு’ படத்துக்குப் பிறகு ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்துக்குத் தான் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது” . இதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது .