யு சான்றிதழ் பெற்றிருக்கும் வைபவின் ‘சிக்ஸர்’ படம்…!

 

வால் மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சிக்ஸர்’.. இப்படத்தை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோமின் படத்தொகுப்பை கவனிக்க, பசர் என்.கே ராகுல் கலையை நிர்மாணித்திருக்கிறார். சாம் மற்றும் ராம்குமார் நடனம் அமைக்க, ஜி.கே.பிலோகன், அன்பு ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

வைபவ், பல்லோக் லாலாவானி நடிப்பில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர்,அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய படம் என்பதற்கான யு சான்றிதழ் கொடுத்துள்ளனர் .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: sixer U Certificate, Vaibav
-=-