https://twitter.com/actor_vaibhav/status/1248207233990590464

வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வைபவ்.

இவரது ட்விட்டர் பக்கத்தை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அதில் வைபவின் ரசிகர் ஒருவர், ”என் மகள் உங்களின் தீவிர ரசிகை. ஒரு நாளைக்கு நூறு முறை ‘வைபவ் அங்கிள்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார். அவள் பேசியவற்றை இணைத்து ஒரு வீடியோ உருவாக்கியுள்ளேன். இவை அனைத்தும் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்டவை. உங்களுடைய வீடியோ பதில் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிறுமி தியா உங்களை நேசிக்கிறாள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு ”இப்படி ஒரு குட்டி ரசிகை எனக்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அம்மா அப்பாவை தொல்லை செய்யாமல் வீட்டில் இருங்கள். வெளியே நிலைமை சரியில்லை. பாதுகாப்பாக இருங்கள். வைபவ் அங்கிள் உங்களை நேசிக்கிறார்” என்று கூறியுள்ள வீடியோவை பதிந்துள்ளார் வைபவ் .