திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபம் எழுந்தருளுகிறார். ‘

அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வைகாசி விசாக திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வருவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..