நுங்கம் பாக்கம்,

லங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

வரும் 22ந்தேதி  ஐநாவில் இலங்கை அரசு கொண்டு வரும்  மனித உரிமைகள் குறித்த தீர்மானத்தில் இந்தியா எதிர்த்து வாக்களிக்க  வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்வதை கண்டித்தும்  இலங்கை தூதரகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.

இந்த முற்றுகை போராட்டம் இன்று காலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கூட்டத்தில் இருந்து பேரணியாக சென்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன் காரணமாக காலை முதலே மதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வள்ளுவர்கோட்டம் பகுதியில் குவியத்தொடங்கினர்.  காலை 10.30 மணி அளவில் வைகோ வள்ளுவர் கோட்டம் வந்தார். அதைத்தொடர்ந்து அவர் தொண்டர்களிடையே பேசினார். ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக  தொண்டர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து வைகோவையும் கைது செய்தனர்.