சென்னை:

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோவுக்கு சிறப்பு நீதி மன்றம் ஓராண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற  புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசு மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கில் கடந்த 5ந்தேதி சிறப்பு நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, வைகோவை குற்றவாள என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும்,  ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து.

இதையடுத்து உடடினயாக ஜாமின் பெற்ற வைகோ, ராஜ்யசபா தேர்தலிலும் போட்டியிட்டு, எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, வைகோ சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில்,  தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனை வழங்கியது தவறு என வைகோ தெரிவித்து உள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.