வைகோ ஆதரவு பெற்ற வீரலட்சுமிக்கு டெபாசிட் காலி

--

download (2)

சென்னை: பல்லாவரம் தொகுதியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி படு தோல்வி அடையும் நிலையில் இருக்கிறார்.

பல்லாவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்  சி.ஆர். சரஸ்வதி வெற்றி பெரும் நிலையில் இருக்கிறார். . திமுகவின் இ.கருணாநிதி 2வது இடத்தில் இருக்கிறார்.

அடுத்த இடத்தில் இருப்பவர் ம.ந.கூட்டணி சார்பில் ம.தி.மு.கவின்  பம்பரம் சின்னத்தில் போட்டியிட்ட வீரலட்சுமி. மூன்றாவது இடம் என்றாலும் அதளபாதாளத்தில் இருக்கிறார் இவர்.   வெறும் 3117 ஓட்டுக்களே பெற்றிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆரவாரமாக  வலம் வரும்  வீரலட்சுமியை, “வெற்றி” வேட்பாளராக,  விஜயகாந்த் முன் கொண்டு போய் நிறுத்தியவர் வைகோ.

இது நடப்பதற்கு முன், வைகோ உட்பட பலரையும் “வடுக வந்தறிகள்” என்று முகநூலில் வசைபாடியவர்தான் வீரலட்சுமி. அது மட்டுமல்ல. தமிழகமே குமட்டிக்கொண்டு எதிர்த்த சிம்புவின் “பீப்” பாடலுக்கு ஆதரவு தெரிவித்தவர் இந்த பெண்மணி.

download (3)

ஆனாலும் வைகோ ஆதரவுடன் பல்லாவரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் கூட வீரலட்சுமிக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவு கிடைக்கவே இல்லை. குறிப்பாக காஞ்சிபரம் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளரான அனகை முருகேசன், “தொகுதியை விட்டு போய்விடு” என்று மிரட்டியதாகவும் செய்திகள் வந்தன.

இப்போது வீரலட்சுமி டெபாசிட்டைப் பறி கொடுக்கும் நிலையில் இருக்கிறார்.