விதிமுறைகளை பின்பற்றாத ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் : வைகோ

சென்னை

ரிச்ர்வ் வங்கி ஆளுநர் நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட பனிப்போர் காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகுவார் என பலமுறை செய்திகள் வந்தன. ஆனால் அதை அரசும் உர்ஜித் படேலும் மறுத்து வந்தனர். இந்நிலையில் உர்ஜித் படேல் தனது சொந்தக் காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநராக ஐஏஸ் அதிகாரியான சக்தி காந்த் தாஸ் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நியமனம் குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகினால் அந்த பதவியை துணை ஆளுநருக்கு அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும் . ஆனால் இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு பின்பற்றவில்லை. அத்துடன் ரிசர்வ் வங்கி நிர்வாக ஆலோசனைக் குழுவில் கடந்த ஓராண்டில் நியமிக்கப்பட்டவர்களை நீக்க வேண்டும்” என கூறி உள்ளார்.