வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்?: வைரலாகும் வீடியோ

சென்னை

திமுக பொதுச்செயலாளர் வைகோ, குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் தவறாமல் தேவாலயத்துக்குச் சென்று வருவதாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்தவ பிரச்சாரகர் ஒருவர் பேசும் இந்த வீடியோவில் அமெரிக்காவில் உள்ள வைகோவின் மகளும் மருமகனும் சர்ச்சுக்கு ஞாயிறு தோறும் ஊழியம் செய்வதாகவும், வைகோ ஒரு கட்சி தலைவராக இருப்பதால் அதை அவர் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதாகவும், கூடிய விரைவில் இதை அவர் வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறுவது போன்று அந்த வீடியோ காட்சி இருக்கிறது.

வைகோவைப் பொறுத்தவரை அவர் ஒரு பகுத்தறிவாதி, எந்த மத சார்பும் இல்லாதவர் என்றே இத்தனை காலமாக  பொதுமக்கள் எண்ணி வருகின்றனர். ஆகவே இந்த வீடியோ, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பும் இதே போன்ற ஒரு தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது

You may have missed