கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ சாடல்

சென்னை: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடி இருக்கிறார்.

தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை, தொல்லியல்துறை, சுகாதாரத்துறை என பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

இது ஓபிஎஸ்சின் 10வது பட்ஜெட் இல்லை, பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதேபோன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தமிழக பட்ஜெட்டை விமர்சித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை/

வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லை/

மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ நிதிநிலை அறிக்கையில் இல்லை/

2016ல் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது, டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி