நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுப்பு: வைகோ தர்ணா

கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்படாடர்.

மாணவிகளை தவறான வழிக்கு வற்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி குறித்த செய்தி நக்கீரன் இதழில் வெளியானது. அதில் தான் ஆளுநரை சந்தித்திருப்தாக நிர்மலாதேவி தெரிவித்திருப்பதாக வெளியானதாகவும், இதையடுத்து  ஆளுநர் தரப்பில் புகார் அளிக்கப்பட.. அதன் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோபால் கைதை கண்டித்து கருத்து கூறினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மேலும்  கோபாலை சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் சென்றார். ஆனால் கோபாலை சந்திக்க அவரை அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அங்கே தரையில் உட்கார்ந்து வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

“சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்திருக்கிறேன். அவரை சந்திக்க போலீசார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vaiko Dharna:  denies   permission to meet gopal, நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுப்பு: வைகோ தர்ணா
-=-