சென்னை,

திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது நீதி மன்ற காவல் 27ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2ம் தேதி கைசெய்யப்பட்ட வைகோவின் 15நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆஜரானார். ஆனால், அவரது நீதிமன்ற காவலை  வரும்  27ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார்.

இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று 15வது நாளை முடிவடைவதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அவரது சிறைவாசம் மேலும் 10 நாள் நீடிக்கப்பட்டுள்ளது.