மு க ஸ்டாலின் – வைகோ திடீர் சந்திப்பு

கோயம்புத்தூர்

கோவை விமானநிலையத்தில் வைகோவும் மு. க. ஸ்டாலினும் சந்தித்துள்ளனர்.

ஆர் கே நகர் இடைத்தேர்தல் தற்போது சூடு பிடித்து வருகிறது.  இந்த தேர்தலில் மதிமுக தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.  திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.  இவருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவை அளித்துள்ளன.

இன்று திடீர் என கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயளாளர் வைகோவை திமுக வின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்துள்ளார்.  இது குறித்து பலரும் பல ஊகங்களைக் கூறி வருகின்றனர்.  வைகோ இது சாதாரண சந்திப்பு எனவும் ஆர் கே நகர் தேர்தல் பற்றி தாம் மு க ஸ்டாலினுடன் எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  மு.க. ஸ்டாலின் தரப்பில் இருந்து இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.