வைகோவுக்கு தடை: திருநாவுக்கரசர் கண்டனம்!

சென்னை,

லேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ மலேசியா பயணமானார்.

ஆனால், மலேசிய விமான நிலையத்தில், மலேசிய போலீசார் வைகோ  தடுத்து நிறுத்தப்பட்டார். மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

மேலும், அவரது பாஸ்போர்டையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதையடுத்து  இன்று இரவு விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த நிகழ்வுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர்,  மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்றும், வைகோவின் கொள்கைக்கும், எனது கருத்துக்கும் வேறுபாடு இருந்தாலும் ஒரு தமிழனாக இதை கண்டிக்கிறேன் என்றார்.

வைகோவை மலேசியாவிற்குள் நுழைய தடை விதித்தது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றும், , பாஸ்போர்ட், விசா அனுமதி பெற்று  சட்டத்திற்குட்பட்டு சென்ற வைகோவை மலேசியாவிற்குள் நுழைய தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed