மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு

கோலாலம்பூர்:

லேசியா சென்ற  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து மலேசிய அதிகாரிகள் திரும்பிச் செல்ல உத்தரவிட்டனர். அவரது பா்ஸபோர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள  நேற்று இரவு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இறங்கினார்.

அவரை மலேசிய நாட்டிற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்தனர்.  மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இருப்பதாக மலேசிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று இரவு விமானத்தில் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.