வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது! வெங்கையாவுக்கு சசிகலா புஷ்பா பரபரப்பு கடிதம்

டில்லி:

தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றுள்ள  வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான  வெங்கையா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்சபா எம்.பி. பதவிக்கான தேர்தலில், திமுக ஆதரவுடன் வைகோ போட்டியிடுகிறார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த நிலையில், வைகோ விற்கு எதிராக, அவரது தேசதுரோக வழக்கு மற்றும், அதில் அவருக்கு வழங்கப்பட்ட ஓராண்டு தண்டனையை சுட்டிக்காட்டி, அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா,  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு புரபரப்பு புகார் மனு அனுப்பி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  வைகோ ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக வும், அவர்மீது ஐபிசி செக்ஷன் 124(A)படி, நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்த வெளியிட்டு விழாவில் பேசியதற்காக கடந்த 2009ம் ஆண்டு தேச துரோக வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு  அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையையும் சிறப்பு நீதிமன்றம் விதித்து உள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தங்களது பதவியில் இருந்து தகுதியிழக்கும் நிலையில், வைகோ தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியிழந்தவராகிறார்.

மேலும்,  வைகோ தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவேன் என்றும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசுவேன் என்றும் கூறி உள்ளார். அதன் காரணமாக அவர் ராஜ்யசபா பதவி ஏற்க அனுமதி அளிக்கக்கூடாது, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்றும் அந்த கடிததத்தில் சசிகலா புஷப் வலியுறுத்தி உள்ளார்.

சசிகலா புஷ்பாவின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி