இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது! வைகோ

மிழக ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து, எந்தக் கருத்தையும் வெளியிடாமல், கருவேல மரங்களை ஒழிக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இன்று சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் செய்தியாளர்கள், தற்போதைய அரசியல் சூழல், சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்டது குறித்தெல்லாம் பல  கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு வைகோ, “ தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து நான் எந்தக் கருத்தும் வெளியிட விரும்பவில்லை. தற்போது என்ன பேசினாலும் அது சரியாக இருக்காது” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

கார்ட்டூன் கேலரி