வைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..

நெட்டிஷன்:

சவுக்கு சங்கர் முகநூல் பதிவு…

வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினர் பார்த்து பயன்பெறட்டும்…

சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வைகோ, காந்தி உருவ பொம்மைக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து கூறும்போது கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

மகாத்மா காந்தி தேசம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைக்கும் பாடுபட்டவர். அண்மையில் உ.,பி-யில் இந்து அமைப்பின் தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை அவரது நினைவு தினம் அன்று சுட்டு கொண்டாடினார். இந்த விவகாரம் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது என்று வைகோ பேசிக் கொண்டிருக்கும் போதே, திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

வைகோவின் கண்ணீர் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்துகொண்டிருக்கிறது…