ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ பிரசார பயணம்

வைகோ

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வைகோ பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   பல எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.   மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இந்த ஆலையால் மக்கள் பெரிதளவும் பாதிக்கப்படுவதாக பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தூத்துக்குடியில் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.   இந்த மாதம் 17, 18, 21, மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர் வாகனம் மூலம் பிரசாரப் பயணம் மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

You may have missed