பெரியார், எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் வைகோ அஞ்சலி

சென்னை

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை;

”பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 44ஆவது நினைவு நாளான இன்று மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தாயகத்தில் உள்ள தந்தைப் பெரியார் திருஉருவச் சிலைக்கும், பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் அவர்களின் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் 30 ஆவது நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், பகுதி செயலாளர்கள் எழும்பூர் தென்றல் நிசார், வேளச்சேரி சு.செல்வபாண்டியன், அண்ணாநகர் இராம.அழகேசன், எம்.ஜி.ஆர். நகர் இரவி, சி.என்.அண்ணாதுரை, சூளைமேடு குமார், மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் தாம்பரம் மணிவண்ணன், தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கௌசல்யா இரவி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.” _ இவ்வாறு மதிமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.