வைகோ : ரஜினிகாந்த் அறிவிப்பை அரசியல் உலகமே எதிர்பார்க்கிறது

சென்னை

ஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு பற்றி வைகோ  கருத்து தெரிவித்துள்ளர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வரும் 31ஆம் தேதி வெளியிடப் போவதாஅக தெரிவித்திருந்தார்.  இது குறித்து அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள்  ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.  இன்று மதுரை விமான நிலையத்தில் மதிமுக வின் தலைவர் வைகோ செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது வைகோ, “ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடப் போகிறார் என்பதை அரசியல் உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.   இன்னும் 3 நாட்களில் அவர் அது குறித்து அறிவிக்கப் போவதாக கூறி உள்ளார்.  அரசியல் அவர் பங்கேற்பது அவர் ஜனநாயக உரிமை” என தெரிவித்துள்ளார்.