தீக்குளித்த வைகோ மருமகன் உயிரிழப்பு

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சரவணசுரேஷ் (வயது 50). வைகோ மனைவி ரேணுகாதேவியின் அண்ணன் மகன். வைகோவுக்கு மருமகன் உறவுமுறையாகும். விருதுநகர் எஸ்.பி.ஐ. காலனியில் குடியிருந்தார். நேற்று காலை 7 மணிக்கு ஸ்டேடியம் அருகே தீக்குளித்தார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று அவர் இறந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நீட் தேர்வு ரத்து கோரிக்கையை வலியுறுத்தி, அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது தீக்குளிப்புக்கு நாம் தமிழர் கட்சியினர் தன்னை கேலி செய்து மீமிஸ் வெளியிட்டது தான் காரணம் என்று வைகோ நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.