சென்னை:

ழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை தான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என்றும் அப்படி யாரும் கருதினால் அதற்காக வருந்துகிறேன் என்றும் பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசினார். அப்போது அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் சுபாஷ் மாலிக் வெளியிட்ட Indian Movements Sum Aspects of disserts Protest and reforms என்ற நூலில். ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என்கிற கோணத்தில் எழுதப்பட்டிருப்பதை வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார்.

வைரமுத்துவின் பேச்சு, தினமணி நாளிதழிலும் வெளியானது.

சுபாஷ்மாலிக் கருத்தை வைரமுத்து பதிவு செய்தது குறித்து இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா உட்பட சிலர் மற்றும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் வைரமுத்து தெரிவித்திருப்பதாவது:

“ஆளுமைகளை மேன்மைபடுத்துவதே இலக்கியத்தின் நோக்கமின்றி சிறுமை செய்வதன்று.  மேலும் ஆண்டாள் பற்றிய தன் கருத்துகள் எல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசினேன். , ஆண்டாள் பற்றி இண்டியானா பல்கலைகழகத்தின் ஆய்வு நூலில் கூறிய ஒரு வரியையே மேற்கோள் காட்டினேன்.

ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று. ஆனாலும் இதனால் எவர் மனமேனும் , புண்பட்டிருந்தால் வருந்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.