#Metoo சர்ச்சை: வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் ஆடியோ மூலம் பாலியல் புகார்

வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதை தொடர்ந்து, மற்றுமொரு பெண் மீது அவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

vairamuthu

சமீப காலமாக இந்தியாவில் ’ மீ டூ ‘ என்ற இயக்கம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. சினிமா துறையில் தொடங்கி, விளையாட்டுத்துறை என நீண்ட பட்டியல் இறுதியாக மத்திய அமைச்சர் வரையிலும் சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருசில நாட்களுக்கு முன்பு பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனை மறுத்து பதிலளித்து வைரமுத்து பேசிவருகிறார். இந்த சர்ச்சை மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றுமொரு பெண் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா என்பவரது டுவீட்டை ரீடுவிட் செய்துள்ளார். அதில் பேசிய பெண், தன்னுடைய தோழிக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.

சின்மயி வெளியிட்டுள்ள டிவிட்டர் குரல் பதிவில் கூறப்பட்டதாவது, ” ஹலோ வைரமுத்து அவர்களே.. நீங்கள் எனது குரலைக் கேட்டதும் உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கும். நான் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற விஷயத்திற்கு வரவில்லை. ஆனால், எனக்கு நல்லா தெரியும் நீங்க தப்பு பண்ணியிருக்கீங்க. நான் என்னுடைய தோழிக்காக இப்ப பேசுறேன்.

அவளுக்கு வயது 24. நீங்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தபோது, எல்லோரும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். அப்போது எனது தோழியும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினாள். அந்த நேரத்தில் நீங்கள் அவளுடைய போன் நம்பரை கேட்டீங்க. அவளும் அப்பா ஸ்தானத்தில் உங்களை வைத்து போன் நம்பரை கொடுத்தாள்.

ஆனால், அன்றிரவு நீங்கள் எனது தோழிக்கு போன் செய்து எவ்வளவு அநாகரீகமாக கவிதை சொன்னீர்கள் என்று தெரியுமா. உங்களுக்கு தெரியும். அந்தக் கவிதை சொன்னால் உங்களுக்கு தெரியும். அதை சொல்லுகிறேன் கேளுங்க..

‘உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை’ இந்தக் கவிதை உங்களுடையது தான். இதை நீங்கள் இல்லை என்று மறுத்தாலும் அதை என்னால் நிரூபிக்க முடியும். நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.

சின்மயி.. உங்களால் தான் எனக்கும் இப்ப இந்த பிரச்சயை பேச முடியுது. இவ்வளவு நாளா எனக்கு அசிங்கமா அவமானமா இருந்தது. நீங்க ஓபனா பேசுனதுக்கு அப்புறம் தான் எங்களுக்கும் தைரியம் வந்துச்சு. அதுக்காக உங்களுக்கு நன்றி சொல்லிகிறேன் “ என்று கூறப்பட்டுள்ளது.