வைரமுத்து என்னிடம் அத்துமீறினார்!: இளம்பெண்ணின் ட்விட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி

டந்த சில தினங்களாக, ட்விட்டரில் “மீ டு” (#MeToo) என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.  பெண்கள் பலர், தங்களுக்கு  நேர்ந்த பாலியல் தொல்லைகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளி உலகத்திற்கு தெரிவித்து வருகின்றனர். தங்கள் பாதுகாப்பு கருதி பல பெண்கள் தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தாமல் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை மட்டும் பதிவிட்டு வருகிறார்கள்.

ட்விட்டரில் இயங்கும் சந்தியா மேனன் எந்ற பெண்மணி,  தனக்கு சில பெண்கள் அனுப்பிய அவலங்களை  தொகுத்து பதிவிட்டு வருகிறார்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலியல் பிரபல தமிழ்த்திரையுலக பாடலாசிரியர் ஒருவர் தன்னிடம் அத்துமீறி நடந்தாக ஒரு இளம்பெண் அனுப்பினார் என்று சந்தியா மேனன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவிடம் ஒரு ப்ராஜக்டுக்காக நான் பணிபுரிந்தேன். அப்போது அவர் அவர் மிகப்பெரிய மனிதர். யதை திரைத்துறை, ஊடகத்துறை மற்றும் இதர துறபல ஊடகவியலாளர்கள், சினிமா துறையினர் குறித்த காம களியாட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று வைரமுத்துவால் நிகழ்ந்த அவலங்களை ஒரு பெண் சந்தியா மேனனுக்கு அனுப்பவே அதை அப்படியே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அவர்.

அந்த பதிவில், திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தனது விருப்பம் இல்லாமல் கட்டி அணைத்து, முத்தமிட்டதாகவும்  தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது வைரமுத்துவின் அலுவலகமும், வீடும் கோடம்பாக்கத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  வைரமுத்து ஒரு காம மிருகம் என்பது சினிமா துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் என்றும், அவரது அரசியல் செல்வாக்குக்கு   பயந்து எவரும் வாய் திறக்க மறுக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை பிரபல திரைப்பட பாடகி சின்மயி. பகிர்ந்ததோடு, “அவர் யார் என்பது திரைத்துறைக்கே தெரியும்” என்று கருத்து பதிந்திருக்கிறார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையே வைரமுத்துவின் ரசிகர்கள் இப்பதிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி