சென்னை,

திமுகவில் இருந்து வைத்திலிங்கம் எம்.பி. நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் நேற்று இணைந்தது. அதைத்தொடர்ந்து, அதிமுகவில் பொதுக்குழு கூட்டி, சசிகலாவின் பதவி பறிக்கப்படும் என்றும், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று , கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் எம்.பி., அறிவித்தார்.

அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ள அறிவிப்பு டிடிவி தினகரன் தரப்பில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்  கவர்னரை சந்தித்து, தங்களது ஆதரவு முதல்வர் எடப்பாடிக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்கிறோம் என்று கடிதம் கொடுத்துள்ள நிலையில்,

அதிமுக எம்.பி.யான வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.