பிக் பாஸ் : வையாபுரி இன்று வெளியேற்றம் ?

நெட்டில் வெளியான புகைப்படம்

நெட்டிசன்

“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இன்று வையாபுரி வெளியேற்றப்படுகிறார் என செய்தி வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் ஒருவர் வெளியேற்றப்படுகிறார்.   அந்த நிகழ்வு சனிக்கிழமை நடை பெற்றாலும் ஞாயிறு வரை சஸ்பென்சாக வைக்கப்பட்டு ஞாயிறு இரவு தான் ஒளிபரப்பப் படுகிறது.

நேற்று வையாபுரி வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் அவர் வீட்டுக்கு சென்றதாகவும் புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி உள்ளன.   ஏற்கனவே காயத்ரி ரகுராம் வெளியான உடன் அவர் பெயரில் ஒரு டிவிட்டர் செய்தி வெளியானதும் உடனடியாக அது நீக்கப்பட்டதும் தெரிந்ததே.