வாஜ்பாய் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு

ரித்வார்

ன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த வியாழக்கிழமை மறைந்தார்.    அவருடைய உடல் டில்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிதி தலத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.   அவரது சிதைக்கு வளர்ப்பு மகள் நமீதா எரியூட்டினார்.   லட்சக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடைய அஸ்தி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.   மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உபி முதல்வர் யோகி, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வரும் 19 ஆம் தேதி நாடெங்கும் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட உள்ளதாக பாஜக அறிவித்து இருக்கிறது.

வாஜபாய்  மறைவுக்காக சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.  வரும் 20 ஆம் தேதி டில்லியில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.