நாளை தமிழகம் வரும் வாஜ்பாய் அஸ்தி 6 இடங்களில் கரைப்பு

டில்லி

நாளை வாஜ்பாய் அஸ்தி சென்னை கொண்டு வரப்பட்டு ராமேஸ்வரம், சென்னை, கன்யாகுமரி உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்படுகிறது.

பாஜகவின் முத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த வியாழக்கிழமை மறைந்தார்.     வெள்ளிக்கிழமை அன்று அவர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.    வாஜ்பாயின் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் எரியூட்டினார்.    அவரது அஸ்தியில் ஒரு பகுதி நேற்று ஹரித்வாரில் கங்கையில் கரைக்கப்பட்டது.

இன்று மாலை 4 மணிக்கு டில்லியில் அவருக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடக்க உள்ளது.     இந்த நிகழ்வில் பிரதமர் மோடி,  பாஜக தேசிய தலைவர்கள்,  மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகரக்ள் கலந்துக் கொள்கின்றனர்.    தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதா கிருஷ்ணன். இல. கணேசன், எச்.  ராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் ஒவ்வொரு மாநில தலைவர்களிடமும் வாஜ்பாய் அஸ்தி ஒப்படைக்கப்படுகிறது.  தமிழ்நாடு சார்பில் பெற்றுக் கொள்ளும் தமிழிசை சௌந்தர்ராஜன்  அந்த அஸ்தியை சென்னை பாஜக அலுவலகத்தில் ஒபடைக்கிறார்.     அந்த அஸ்தி இரு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்ககப்பட உள்ளது..

இரு தினங்கள் சென்றதும், அஸ்தியை ஊர்வ்லமாக எடுத்துச் சென்று சென்னை அடையாறு கடற்கரை, ராமேஸ்வரம்,  கன்னியாகுமர், மதுரை வைகை ஆறு, ஈரோடு பவானி ஆறு,  ஸ்ரீரங்கம் காவிரி ஆறு ஆகிய 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.

You may have missed