வாஜ்பாய்க்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்! ராகுல்காந்தி

டில்லி:

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலம்பெற வேண்டி பிரார்த்திப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.

வயது முதிர்வு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்ட  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்து வந்தது.

நேற்று முதல் அவரது உடல்நிலை கவலைக்கிட மாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ மனை தெரிவித்தது.  இன்று காலையும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. உயிர்காக்கும் கருவிகள் மூலம் அவரது உடல் இயங்கி வருவதாக எய்ம்ஸ் மீண்டும் தெரிவித்தது.

இந்த நிலையில், வாஜ்பாயின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, வெங்கையாநாயுடு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட ஏராளமானோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்ற னர்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு வாஜ்பாயை நேரில் சந்தித்து அவரது  உடல்நலம் குறித்து விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், வாஜ்பாய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலை தேற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்று கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி