வாஜ்பாயை சிறுமைப்படுத்தும் பாஜக : சிவசேனா கண்டனம்

மும்பை

வாஜ்பாய் அஸ்தி கரைப்புக்கு அரசியல் சாயம் பூசி அவரை சிறுமைப்படுத்தியதாக பாஜக மீது சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை நாடெங்கும் உள்ள பல நதிகளில் கரைக்க பாஜக திட்டமிட்டது.  அதன் படி அவரது அஸ்தி ராமேஸ்வரம், உள்ளிட்ட பல புண்ணிய தலங்களில் கரைக்கப்பட்டது.    அவரது அஸ்திக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்த பேரணிகள் நடத்தபட்டன.   அதில் பல அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னா வில் இத் குறித்துஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  அதில், “வாஜ்பாய் அஸ்தி கரைப்பு என்பது முழுக்க முழுக்க பாஜகவினர் மட்டுமே கலந்துக் கொண்ட நிகழ்வாகி விட்டது.   அவர் கட்சியை தாண்டி அனைவருக்கும் பொதுவானவர் என்பதை பாஜக மறைந்து விட்டது.   அவரது அஸ்தியை ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது எதிர்க்கட்சியினர் யாரையும் அழைக்கவில்லை.

மாறாக பாஜகவினர் அந்த அஸ்தி கலசத்துடன்செல்ஃபி எடுத்துக் கொண்ட கொடுமைதான் நடந்துள்ளது.   ஜவகர்லால் நேரு மற்றும் வாஜ்பாய் ஆகியோர் கட்சியை தாண்டி நாட்டுக்கு உரிமையானவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.  எனவே அவருடைய அஸ்தி கரைப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  மகாராஷ்டிராவின் சிவஏனா தலைவர்கள், ஒரிசாவின் நவின் பட்நாயக், அகாலி தள தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொள்ள அழைத்திருக்க வேண்டும்.

வாஜ்பாய் அஸ்தி கரைப்பு என்பதன் முக்கியத்துவம் ஒரு சில இடங்களை தவிர வேறெங்கும் தென்படவில்லை.   கட்சியினர் தங்களை மு நிறுத்துவதாக நடந்துக் கொண்டு வாஜ்பாயை சிறுமைப்படுத்தி உள்ளனர்.   இவ்வாறு அழைப்பது அந்த தலைவருக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி ஒரு பாரம்பரிய நடைமுறை ஆகும். “ என தலையங்கம் வெளியிட்டுள்ளது.