வாஜ்பாய் மறைவு…தமிழக தலைவர்கள் நாளை டில்லி பயணம்

சென்னை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை காலமானார். அவரது இறுதிசடங்கு நாளை டில்லி விஜய்காட்டில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை டில்லி செல்கின்றனர்.

மேலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் டில்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை ஆகியோரும் டில்லி செல்கின்றனர்.