சத்தீஸ்கர் தேர்தல் : பாஜக முதல்வரை எதிர்க்கும் வாஜ்பாய் உறவினர்

ராய்ப்பூர்

ரும் சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கர் முதல்வரை காங்கிரஸ் கட்சி சார்பில் வாஜ்பாயின் பெண் உறவினர் எதிர்த்து போட்டியிட உள்ளார்.


சத்திஸ்கர் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல் வரும் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட தேர்தலில் 18 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே 12 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் பெண் உறவினர் கருணா சுக்லா. இவர் அம்மாநில பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். அதன் பிறகு அவருக்கும் கட்சித் தலைமைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதனால் சில ஆண்டுகளுக்கு முன் கருணா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தற்போது காங்கிரஸ் மீதமுள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அம்மாநில முதல்வர் போட்டியிடும் ராஜ்நந்த்கான் தொகுதியில் கருணா சுக்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக முதல்வரை எதிர்த்து பாஜகவின் முன்னாள் பிரதமரின் உறவினர் போட்டியிடுவது சத்தீஸ்கர் மக்கலிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.