அஜீத் பட தயாரிப்பாளர் மகள்களுக்கு கொரோனா பரிசோதனை.. போனிகபூர் தகவல்..

ஜீத் பட தயாரிப்பாளர் மகள்களுக்கு கொரோனா பரிசோதனை..
போனிகபூர் தகவல்..
அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் தயாரிப் பாளர் போனிகபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர். இவர்களுக்கு ஜான்வி, குஷி என் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டது. இதில் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.
முன்னதாக இவர்களது வீட்டில் பணியாற் றிய பணியாளர் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனடியாக அதுபற்றி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து போனிகபூர் டிவிட்டரில் இன்று கூறியிருப்பதாவது:
எனக்கும் என் மகள்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. முன்னதாக கொரோனாவினால் பாதிக்கப் பட்ட எங்களது 3 ஊழியர்களுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர்களும் குணம் அடைந்தனர் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக்கொள் கிறேன். எங்களது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நாட்களும் முடிந்தது. அடுத்து எங்கள் பணிகளை புதியதாக தொடங்குகிறோம்.
எங்களுக்கு சிகிச்சை அளித்த மத்திய மற்றும் மகாரஷ்டிரா அரசுக்கும், டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட சுகாதாரா பணியாளர்களுக்கு எங்கள் நன்றி. இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி அதிலிருந்து மீண்டு வருவோம். கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணம் அடைய பிரார்த்திப் போம். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம் அரசு அளிக்கும் வழிமுறைகளை பின்பற்று வோம்.
இவ்வாறு போனிகபூர் கூறி உள்ளார்.