அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீரஷ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ‘வலிமை’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று போனி கபூர் அறிவித்திருந்தார் .

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால், தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது, கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக போய்விடலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிட்டுக் கொள்வோம் எனவும் முடிவு செய்துள்ளது படக்குழு.