அக்டோபர் மாதம் முதல் ‘வலிமை’ படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டம்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது தமிழக அரசு 75 பேருடன் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தெரிவித்ததையடுத்து அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க ‘வலிமை’ படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

தற்போதைய சூழல்படி முன்பாக திட்டமிடப்பட்ட தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பதால், 2021 கோடை விடுமுறை வெளியீடு எனத் திட்டமிட்டுள்ளது ‘வலிமை’ படக்குழு.

இந்தப் படத்தில் அஜித்துடன் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.