இணையத்தில் வைரலாகும் ‘வலிமை’ படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள்…!

https://twitter.com/AjithFans24x7/status/1235487227238469632

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹியூமா குரோஷி நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 30% முடிவுற்றுள்ளது.

அஜித் – வில்லன்கள் மோதும் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கவுள்ளது.

மொத்தம் இந்தப் படத்தில் அஜித்துடன் 3 வில்லன்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் ஒருவராக நடிக்கத் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மிகவும் ரகசியமாகப் பகிர்ந்துகொண்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

ஆனால், படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. க்ரேன் கேமராவில் இயக்குநர் ஹெச்.வினோத் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம், படப்பிடிப்புத் தளத்தில் டுகாடி பைக்குகள் வரிசையாக நிற்கும் புகைப்படம், வெளிநாட்டு ரேஸ் பைக் நிற்கும் புகைப்படம் ஆகியவை வெளியாகியுள்ளன.