Popcorn box; Disposable cup for beverages with straw, film strip, ticket and clapper board. Detailed vector illustration. EPS10 file.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பாக இதுவரை எந்தவொரு முடிவுமே எடுக்கவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாம் என்றும், முதலில் படப்பிடிப்பை முடிப்போம் என்றும் படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு உரிமையை பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளது யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கொடுத்துள்ள தொகை, முந்தைய அஜித் படங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையை விட அதிகம் என்கிறார்கள்.