நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. அந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் வலிமை பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படமும் தியேட்டருக்கு பதிலாக ஓடிடியில் வெளியாகும் என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

என் 40 ஆண்டு கால கெரியரில் நான் பல படங்களை தயாரித்திருக்கிறேன். அனைத்து படங்களும் தியேட்டரில் ரிலீஸாகியுள்ளன. ஓடிடி, தியேட்டர்கள் அல்லது தொலைக்காட்சி ஆகியவை ஒன்றாக செயல்பட்டு நன்றாக வரும் என்று என் அனுபவத்தில் கூறுகிறேன்.

சில படங்களை தியேட்டர்களில் வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் அத்தகைய படங்களை தியேட்டர்களில் தான் முதலில் வெளியிட வேண்டும். என் புதுப் படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் .