அக்.31ந்தேதி வல்லபபாய் பட்டேல் சிலை திறப்பு: குஜராத் அமைச்சர் முதல்வர் எடப்பாடிக்கு நேரில் அழைப்பு

சென்னை:

ந்த மாதம் இறுதியில் திறக்கப்பட  உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

குஜராத்தில் நர்மதை ஆற்றில்  இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும், சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. உலகின் உயரமான இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு முதல் நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில் 597 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான  பிரமாண்ட சிலை அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது.

தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில வரும் 31ந்தேதி வல்லபபாய் பட்டேலின் பிறந்த நாளின் போது,  சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வல்லபபாய் பட்டேல் சிலையை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்சிக்கு குஜராத் அரசு சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குஜராத் சுற்றுலாத் துறை அமைச்சர் கண்பத்சிங் வத்சவா மற்றும் அதிகாரிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து,  அழைப்பிதழ் கொடுத்தனர்.